Jananam [Birth]
Failed to add items
Add to cart failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Follow podcast failed
Unfollow podcast failed
New to Audible Prime Member exclusive: 2 credits with free trial
Buy Now for ₹62.00
-
Narrated by:
-
Kulashekar T
-
Written by:
-
Vaasanthi
About this listen
ஜனனம்', நான் இந்திய வட கிழக்குப் பிரதேசங்களில் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் பிறந்தவை. என் கணவர் மூத்த பொறியியலாளராக மத்திய பொதுப்பணித் துறையின் ஊழியராகப் பணியாற்றிய போது அவருடன் அந்த மாநிலங்களில் வசித்ததில், அசாதாரண அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. அவை கதைக் களங்களாகப் பரிணமித்தன. தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் மாறுபட்ட இடங்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் புதிய தரிசனங்களையும் ஏற்படுத்தின என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
'ஜனனம்' என்ற நாவலுக்கு, நாங்கள் அஸ்ஸாமில் இருந்தபோது நான் கேள்விப்பட்ட ஒரு விபத்தின் விவரம் காரணமாயிற்று. ஒரு பஸ் விபத்தில் ஒரே ஒரு பெண் பிழைத்தார் என்றும், அவருக்கு விபத்தின் அதிர்ச்சியால் தன்னுடைய பழைய வாழ்வு முற்றிலும் மறந்து போனதாகவும் கேள்விப்பட்டவுடன் அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்வைப் பற்றி எனக்குக் கவலையேற்பட்டது. சோகக் கதையாக இல்லாமல் அதை ஒரு காதல் கதையாக எழுதவேண்டும் என்று ஏன் நினைத்தேன் என்று இன்று திட்டவட்டமாகச் சொல்லமுடியவில்லை. நான் பார்த்த ஒரு இந்தி நாடகம் ஆனால் கதையை நானே மிகவும் ரசித்து எழுதியது அதற்குக் காரணமாக இருக்கலாம். நினைவிருக்கிறது. கதை 15 ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடனில் வெளியானது. பிறகு மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மாத்ரு பூமியில் பிரசுரிக்கப்பட்டது. அதைப் படித்து மிகவும் ரசித்து 'இந்நிலே' என்ற தலைப்புடன் பிரபல (மறைந்த) பட இயக்குனர் பத்மராஜன் மலையாளத்தில் சினிமா எடுத்தார்.
Please note: This audiobook is in Tamil.
©2010 Vaasanthi (P)2014 Pustaka Digital Media Pvt. Ltd.