சொந்தப் பாட்டியையே கொள்ளையடிக்க முயன்ற IT பெண்! சிக்கியது எப்படி? cover art

சொந்தப் பாட்டியையே கொள்ளையடிக்க முயன்ற IT பெண்! சிக்கியது எப்படி?

சொந்தப் பாட்டியையே கொள்ளையடிக்க முயன்ற IT பெண்! சிக்கியது எப்படி?

Listen for free

View show details

LIMITED TIME OFFER | Get 2 Months for ₹5/month

About this listen


புனேவில் உள்ள ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 31 வயது மென்பொருள் பொறியாளர், தன் சொந்தப் பாட்டியையே மிளகாய் பொடி அல்லது ரசாயனம் தெளித்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடெக் மற்றும் எம்பிஏ முடித்துவிட்டு ஹின்ஜேவாடி ஐடி பூங்காவில் கைநிறைய சம்பளத்தில் பணியாற்றி வரும் இந்தப் பெண், கடந்த சில வாரங்களில் மட்டும் தனது மாமா மற்றும் உறவினர்களின் வீடுகளில் இருந்து சுமார் 15 சவரன் தங்க நகைகளைத் திருடியிருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.




COVID காலத்திற்குப் பிறகு பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காகவே இவர் இந்தத் திருட்டுகளில் ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது. தனியாக வசிக்கும் வயதான உறவினர்கள் தன்னிடம் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பதாலும், எளிதில் ஏமாற்றலாம் என்பதாலும் அவர்களையே இவர் குறிவைத்துள்ளார். ஒரு வயது குழந்தையின் தாயான இந்தப் பெண்ணின் செயல்கள் குறித்து அவரது கணவருக்கே தெரியவில்லை என்பதுதான் இதில் உச்சக்கட்ட அதிர்ச்சி. உறவினர் என்ற அடிப்படையில் ஒரு புகார் திரும்பப் பெறப்பட்டாலும், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்வி மற்றும் அந்தஸ்து இருந்தும் ஒருவரை குற்றப்பாதையில் தள்ளும் பணத்தாசை மற்றும் நிதி நெருக்கடி குறித்த ஒரு ஆழமான அலசல் இந்த வீடியோ.




இது போன்ற உங்கள் வாழ்வில் நடந்த அல்லது நீங்கள் கேள்விப்பட்ட உண்மைச் சம்பவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினால் theopenmicpodcasts@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கதைகளை எழுதி அனுப்புங்கள்.


No reviews yet