Pattikkaadu cover art

Pattikkaadu

Pattikkaadu

Written by: durai arasu
Listen for free

About this listen

Become a Paid Subscriber: https://podcasters.spotify.com/pod/show/durai-arasu/subscribe ஒரு எளிய கிராமத்தானின் பார்வையில் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதே எனது இந்தக் களம். ஆர்வம், ஆர்வக்கோளாறு, அறிவுத் தீட்சண்யம்(!), கடுமை, இனிமை, எளிமை, கறார் என்று எல்லாம் கலந்த கதம்ப சாதம் இது.durai arasu Politics & Government
Episodes
  • ”தமிழர்-கன்னடர் நல்லுறவு-மொழியால் நிகழட்டும்!”- பெங்களூர் மூத்த பத்திரிகையாளர் முத்துமணி நன்னன் நேர்காணல்
    Oct 21 2024

    பெங்களூருவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதழியல் பணியில் சிறப்பாக இயங்கி வருபவர் திரு.முத்துமணி நன்னன் அவர்கள். கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தை உருவாக்கி திறம்பட நடத்திவருபவர்.

    தொடர்ச்சியாகத் தமிழ்ப்புத்தகத் திருவிழாக்களை நடத்துகிறார். சிறந்த ஆய்வாளர். தமிழ்ப்பற்றாளர். எனது நெருங்கிய நண்பர்.

    அவரிடம் ஒரு பெரிய அறிவுச் செல்வமே இருக்கிறது.

    அவருடன் ஒரு நீண்ட உரையாடல்…

    Show More Show Less
    1 hr and 11 mins
  • நாத்திகர் மாநாட்டில் ஒரு ‘மதங்களற்ற’ தோழன்!
    Oct 20 2024

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 12 ஆம் தேதி (அக்.12, 2024) லிட்மஸ் 2024 என்ற நிகழ்வு நடத்தப்பட்டது. அறிவியல் பார்வை, சமூக நல்லிணக்கம், பகுத்தறிவு சிந்தனை, ஜனநாயகம் ஆகியவற்றை வலியுறுத்தும் எஸென்ஸ் என்ற அமைப்பு இதனை ஆண்டுதோறும் நடத்துகிறது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    அங்கு சங்கர் என்ற அருமையான தோழரைச் சந்தித்தேன். ‘மதங்களற்ற மனிதர்கள்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை எர்ணாகுளத்தில் நடத்திவரும் நல்லவர் சங்கர். மனித நேயம்தான் வாழ்க்கையின் பொருளே என்று கூறும் அவருடன் ஒரு சிறிய உரையாடல். அது இங்கே உங்களுக்காக…


    Show More Show Less
    6 mins
  • கேரள சினிமா: கடவுளின் தேசத்தில் சாத்தானின் கரங்களா?
    Aug 21 2024

    மலையாளத்திரை உலகில் பெண்கள் பாலியல் ரீதியிலாகவும் உழைப்பின் அடிப்படையிலும் கடுமையாகச் சுரண்டப்படுவதாக நீதியரசர் ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.

    முற்போக்குப் பார்வையும் கல்வியறிவும் சமூக நல்லிணக்க மனோபாவமும் கொண்ட கடவுளின் சொந்த தேசம் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?

    என்ன செய்யப்போகிறது?


    Show More Show Less
    14 mins
No reviews yet