S1E11-சோழர் இலக்கியங்கள்
Failed to add items
Add to cart failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
Written by:
About this listen
போன episode ல சோழர் கால சிற்ப கலையை detailed ஆ பாத்தோம்.
பிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் ஒரு மறுமலர்ச்சி, அதாவது, renaissance, என்று சொல்லலாம்.
தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்கள் ல, art forms ல, சோழர்கள் சாதனை செய்திதிருக்கிறார்கள்.
Stone, plaster and metal, அதாவது கல்,சுதை,வெண்கலம். இதை தவிர ஓவிய கலையும் வளர்ந்தது.
இந்த கலைகள் வளர்வதற்கு காரணம் என்ன? பிற்கால சோழர்களுடைய காலத்தில, குறிப்பா இராஜராஜ சோழரின் ஆட்சியில், There was a tremendous expansion in technology and productive forces. கட்டிட கலைஞர்கள், கல் சிற்பிகள், உலோக சிற்பிகள், ஓவியர்கள், கைவினைஞர்கள், இவர்களுக்கு நிறைய ஆதரவு இருந்தது.
அதே நேரத்தில மன்னர் ஆட்சியில் இவர்களுக்கு அரசியல் அதிகாரம் ஒன்றும் கிடையாது. கூலி வேலைக்கரர்களாக தான் கருத பட்டார்கள். ஆனால் சில stone inscriptions ல இந்த தொழிலாளர் களுடைய பெயர பார்க்கலாம்.
இந்த episode ல நாம் அலசப் போவது, சோழர் கால இலக்கியங்கள் - அதாவது Chola literature..
சோழர்கள் ஒரு imperial power ஆக வளர்ந்த பிறகு, ஓரளவுக்கு அந்நிய படையெடுப்பு, உள்நாட்டுக் கலகம் எல்லாம் குறஞ்சது. சைவ, வைஷ்ணவ பக்தி இயக்கங்களின் எழுச்சி தமிழ் மொழிக்கு countless பாசுரங்களையும், பதிகங்களையும் தந்தது.
வசதி இருந்ததால், சோழமன்னர்கள் கலை, இலக்கியங்களை விரும்பி ஆதரித்தார்கள்.
சோழர் காலத்தில எழுதப்பட்ட இலக்கிய பிரதிகள், அதாவது literary works ஐ பத்தி விவரங்கள் பல கல்வெட்டுகளில் காண முடியும்.
இக்காலகட்டத்தில பக்தி இலக்கியங்கள், தமிழ் இலக்கணங்கள், அரசர் புகழ்பாடும் துதி இலக்கியங்கள் என வகைப் பிரிக்கலாம். These were the popular literary genres of that time.