• 197. கைலாசபுரம் - சாம்ராஜ்
    Jun 8 2026

    இடதுசாரி இயக்க மனிதர்களின் போராட்டங்கள் தோற்பதை கோஷங்கள் வெற்றுக் கூச்சல்களாக அலட்சியப்படுத்தப்படுவதை நம்பிக்கைகள் கலைந்து போவதை காதல்கள் மரித்துப் போவதைப் பேசும் சாம்ராஜின் கதைகள், தோழர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் எளிய மனிதர்களோடு நெருக்கமாவதைக் காட்டுவதன் வழியாக அதிகாரத்தின் முன் பலமிழந்தாலும் மக்களது நம்பிக்கையைப் பெறுவதில் அவர்கள் தோற்கவில்லை என்பதை மறைமுகமாகச் சொல்கின்றன. ---- ஜெயமோகன்

    அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுத்து, தண்டனையும் கொடுத்து குற்றவாளியை மருத்துவமனையில் சேர்த்து குணமும்படுத்தி, கத்தியை வைத்து மிரட்டி வாழும் அவனுக்கு அந்தக் கத்தியை வைத்தே பழம் நறுக்கி கொடுக்கும், தோழர்கள் நெஞ்சை தொடுகிறார்கள்.

    Show More Show Less
    25 mins
  • 196. படுகை - ஜி. கார்ல் மார்க்ஸ்
    May 29 2026

    ஜி.கார்ல் மார்க்ஸ் பகடி, நுண்சித்தரிப்புகள் ஆகியவற்றுடன்கூடிய நடை கொண்டவர்.


    ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதிய படுகை கதை ஒரு குற்றவாளியை தேடிச் செல்லும் போலீஸ்காரர்களைப் பற்றியது. இக்கதையில் வறண்ட ஆற்றுக்குள் அவனைப் பிடிக்க அவர்கள் வைக்கும் பொறி, பிடித்தேயாக வேண்டிய கட்டாயத்தின் காரணிகள், திடீரென வெளிப்படும் பெண் கதாபாத்திரத்தால் அவர்களது திட்டம் சீர்குலைவது என நீடிக்கும் கதை நம்மையும் அவர்களைப் போன்று ஒரு புதருக்குள் பதுங்கி குற்றவாளிக்காக காத்திருக்கச் செய்கிறது.

    Show More Show Less
    24 mins
  • 195. துண்டு - கந்தர்வன்
    May 21 2026

    வறியவர்களின் வாழ்வில் அதிகார வர்க்கம் செலுத்தும் அரசியலைச் சொல்லும் கந்தர்வனின் சிறுகதை . முடிவு ஒரு அசத்தல்.
    மார்க்ஸியக் கோட்பாட்டின் மேல் இருந்த உறுதியான நம்பிக்கையால் போராளியாகவே வாழ்ந்தும், உழைக்கும் மக்களின் துன்பங்களைப் பிரச்சார நோக்கில் எழுதப்பட்ட கதைகளாக இல்லாமல் கந்தர்வனின் கதைகள் அன்றாடத்தில் நிகழும் அசாதாரணங்களின் கதைகளாகத் திகழ்ந்தன.

    Show More Show Less
    13 mins
  • 194. கருட வித்தை - என்.ஸ்ரீராம்
    May 15 2026

    கொங்கு மண்ணின் மணம் வீசும் கதைகள் ஸ்ரீராமின் கதைகள். வட்டார மொழியும், சொலவடைகளும் தாராபுர வட்டாரத்தை கண் முன்னே நிறுத்துகின்றன.

    இந்த கதையின் ஆழம் கிணற்று வெட்டிகளையும் பிரமிப்பு அடைய வைக்கும்!

    Show More Show Less
    29 mins
  • 193. கொலைபாதகன் - க.நா.சு
    Apr 23 2026

    "கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன் ஏற்றுக்கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. நான் இன்று கவிதை என்று எழுதுவதை, கம்பனும் இளங்கோவும் டாண்டேயும் ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என் நினைப்பு. நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விடச் சிறந்தவனாக இருக்கலாம் – ஆனால் இலக்கியத் தரத்தால் எந்த வாசகனும் எந்தக் காலத்திலும் எட்டாத ஒரு தரத்தையே பழங்கால, நிகழ்கால, வருங்கால எழுத்தாளர்கள் எல்லாம் எட்ட முயலுகின்றனர். அந்தத் தரம் ஒரு சரடு – அதைக் கண்டுகொள்ளத்தான் நம் பொது ஸீரியஸ் எழுத்தாளனும், தரமுள்ள இலக்கியாசிரியனும் முயலுகிறான். அந்தத் தரத்தை வாசகர்கள் தேடிக் கண்டுகொள்ள வேண்டும்.

    இன்றைய வாசகர்கள் தேடத் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் தேடுவது அவர்களுக்குக் கிடைக்கும்." --- க.நா.சு

    Show More Show Less
    20 mins
  • 192. டை அணிந்தவன் கணேசன் இல்லை - அ. பாண்டியன்
    Apr 12 2026

    சிறுவயதில் நம்மை விட திறமை வாய்ந்தவர்களை, தனித்தன்மை கொண்டவர்களை பெரும்பாலும் நாம் வெறுக்கவே செய்திருக்கிறோம் - அவர்கள் எல்லோர் பாராட்டையும் பெறுவது நமக்கு வயிற்றெரிச்சலை தந்திருக்கிறது. அப்படி இருந்த ஒரு நண்பன் இப்போது கொள்கைகளை துறந்து சாதாரணமாய் இருக்கிறான் என்பதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவனது இழப்பை நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அற்புதமான கதை. அ. பாண்டியனின் அருமையான படைப்பு.

    Show More Show Less
    17 mins
  • 191. சத்ரு - பவா செல்லதுரை
    Apr 5 2026

    191. சத்ரு - பவா செல்லதுரை

    வறண்ட நிலமும் மனங்களும் கொடுந்தன்மை கொண்டுவிடுகின்றன. ஒரு மழை. ஒரே ஒரு மழை. எல்லாம் மாறிவிடுகிறது. கருணை எங்கும் பரவுகிறது. இது தெய்வச் செயலா அல்லது தானாய் நிகழ்ந்ததா?

    இந்தக் கதையில் யார் சத்ரு? உங்களுக்கு தெரிந்தால் email அனுப்புங்கள்.

    Show More Show Less
    16 mins
  • 190. சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்
    Mar 30 2026

    எளிய நடை. பெரிய புதிர். தளர்வில்லாமல் நகர்கிறது இந்த கதை. விமலாதித்த மாமல்லனின் அருமையான கதைகளில் ஒன்று.

    நான் பதிந்திருக்கும் விமலாதித்த மாமல்லனின் மற்ற கதைகள்:

    84. வலி - விமலாதித்த மாமல்லன்

    Show More Show Less
    20 mins