Season's Savings | ₹5/mo for 3 months

₹199/month after first 3 months. Renews automatically. Terms apply.
SBS Tamil - SBS தமிழ் cover art

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Written by: SBS
Listen for free

About this listen
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.Copyright 2023, Special Broadcasting Services Hourly Politics & Government Social Sciences
Episodes
  • மூன்று வீரர்களா? முழு அணியுமா? மீண்டும் வெடிக்கும் Sandpapergate சர்ச்சை!
    Nov 19 2026
    2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை உலுக்கிய Sandpapergate சர்ச்சை, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ளது. முன்னாள் வீரர் Cameron Bancroft வெளியிட்டுள்ள புதிய தகவல்கள், அப்போதைய அணியினர் மற்றும் நிர்வாகத்தின் பங்கு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்தப் புதிய குற்றச்சாட்டுகளால் தற்போதைய அணித்தலைவர் Pat Cummins உட்பட ஆஸ்திரேலிய கிரிக்கெட் மீண்டும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

    #sbsaudiopodcast

    Three Players or the Whole Team? The Sandpapergate Scandal Explodes Again!
    Show More Show Less
    11 mins
  • 'நான் நாக்கு வணிகன் அல்ல, கொள்கைக்காக முரசறைபவன்' – நாஞ்சில் சம்பத்
    Nov 19 2026
    சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு நவம்பர் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை Redgum Function Centre, Wentworthville-இல் பிற்பகல் 4 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தலைசிறந்த பேச்சாளர், அரசியல்வாதி, எழுத்தாளர், நடிகர் என பன்முகம்கொண்ட நாஞ்சில் சம்பத் அவர்கள் தமிழகத்திலிருந்து வருகை தருகிறார். இதுதொடர்பில் அவருடன் ஒரு உரையாடல். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

    #sbsaudiopodcast
    I speak for my Principles, not for Profit – Nanjil Sampath
    Show More Show Less
    20 mins
  • சர்வதேச ஆண்கள் தினம் அவசியம்தானா ??
    Nov 19 2026
    ஆண்களுக்கும் மதிப்புக் கொடுத்து அவர்களுக்குத் தனித்துவமான விடயங்களுக்கான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் ஒரு நாள், சர்வதேச ஆண்கள் தினம்.இது குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய நண்பர்களான சாரு ராம் மற்றும் தினேஷ் இருவரும் ஆண்கள் தினம் குறித்து நடத்தும் ஒரு உரையாடலும் இடம்பெறுகிறது. 2013ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.

    #sbsaudiopodcast

    Do men really want a special day?
    Show More Show Less
    11 mins
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet