• மூன்று வீரர்களா? முழு அணியுமா? மீண்டும் வெடிக்கும் Sandpapergate சர்ச்சை!
    Nov 19 2026
    2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை உலுக்கிய Sandpapergate சர்ச்சை, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ளது. முன்னாள் வீரர் Cameron Bancroft வெளியிட்டுள்ள புதிய தகவல்கள், அப்போதைய அணியினர் மற்றும் நிர்வாகத்தின் பங்கு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்தப் புதிய குற்றச்சாட்டுகளால் தற்போதைய அணித்தலைவர் Pat Cummins உட்பட ஆஸ்திரேலிய கிரிக்கெட் மீண்டும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

    #sbsaudiopodcast

    Three Players or the Whole Team? The Sandpapergate Scandal Explodes Again!
    Show More Show Less
    11 mins
  • 'நான் நாக்கு வணிகன் அல்ல, கொள்கைக்காக முரசறைபவன்' – நாஞ்சில் சம்பத்
    Nov 19 2026
    சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு நவம்பர் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை Redgum Function Centre, Wentworthville-இல் பிற்பகல் 4 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தலைசிறந்த பேச்சாளர், அரசியல்வாதி, எழுத்தாளர், நடிகர் என பன்முகம்கொண்ட நாஞ்சில் சம்பத் அவர்கள் தமிழகத்திலிருந்து வருகை தருகிறார். இதுதொடர்பில் அவருடன் ஒரு உரையாடல். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

    #sbsaudiopodcast
    I speak for my Principles, not for Profit – Nanjil Sampath
    Show More Show Less
    20 mins
  • சர்வதேச ஆண்கள் தினம் அவசியம்தானா ??
    Nov 19 2026
    ஆண்களுக்கும் மதிப்புக் கொடுத்து அவர்களுக்குத் தனித்துவமான விடயங்களுக்கான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் ஒரு நாள், சர்வதேச ஆண்கள் தினம்.இது குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய நண்பர்களான சாரு ராம் மற்றும் தினேஷ் இருவரும் ஆண்கள் தினம் குறித்து நடத்தும் ஒரு உரையாடலும் இடம்பெறுகிறது. 2013ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.

    #sbsaudiopodcast

    Do men really want a special day?
    Show More Show Less
    11 mins
  • பிரபல ஆஸ்திரேலிய பாடகர் Slim Dusty, தனது முதல் இசைத்தட்டை வெளியிட்டார்
    Nov 19 2026
    காலத்துளி நிகழ்ச்சியில் பிரபல ஆஸ்திரேலிய பாடகர் Slim Dusty குறித்தும், 1946ம் ஆண்டு நவம்பர் 19ம் நாள், தனது முதல் இசைத்தட்டை வெளியிட்டது குறித்தும் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

    #sbsaudiopodcast

    Tuesday, November 19, 1946. :Australian country music singer Slim Dusty records his first single.
    Show More Show Less
    5 mins
  • ஆட்குறைப்பு அலை: வேலை தேடுவது ஏன் இவ்வளவு கடினம்?
    Nov 19 2026
    வேலையில்லாதோர் எண்ணிக்கை குறித்த (ABS) ஆஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகத்தின் தரவுகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் ஒரு இலட்சத்து எட்டாயிரத்து முந்நூறு பேர் வேலையை இழந்துள்ளனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

    #sbsaudiopodcast

    The redundancy wave: why job-hunting got so hard
    Show More Show Less
    9 mins
  • இன்றைய செய்திகள்: 19 நவம்பர் 2026 - வியாழக்கிழமை
    Nov 18 2026
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 19/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

    #sbsaudiopodcast

    Today's highlights (19 November 2026 - Thursday)
    Show More Show Less
    6 mins
  • குடியுரிமைத் தேர்வு: யாருக்கு விலக்கு?
    Nov 18 2026
    ஆஸ்திரேலியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது, இரண்டு வயதுப் பிரிவினருக்கு, குடியுரிமைத் தேர்விலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சு (Department of Home Affairs) தெரிவிக்கிறது.இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

    #sbsaudiopodcast

    Citizenship test: who gets a pass?
    Show More Show Less
    3 mins
  • நீரிழிவு நிலை வரும் ஆபத்தில் உள்ளவர்கள் அந்த நிலை வராமல் தடுக்க முடியுமா?
    Nov 18 2026
    உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது .இந்த ஆண்டு உலக நீரிழிவு தினத்தின் கருப்பொருள் "Early action on diabetes" "நீரிழிவு நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்" என்பதாகும்.நீரிழிவு நிலைக்கும் முந்தைய நிலை Pre-Diabetes என்றால் என்ன?அதனை எவ்வாறு கண்டறிவது மற்றும் அது நீரிழிவு நிலையாக மாறாமல் எவ்வாறு சரிசெய்வது ? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் குயின்ஸ்லாந்தில் உள்ள Harvey Bay மற்றும் St Stephen மருத்துவமனைகளில் Endocrinolgist-ஆக பணியாற்றி வரும் Dr எமெர்ஷியா நிலன்ஜனா சுதாகரன் அவர்கள்.அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

    #sbsaudiopodcast

    Can people at risk of developing diabetes prevent it from progressing to diabetes?
    Show More Show Less
    13 mins