The Raja-Praja Show - முடி மன்னரும் குடி மக்களும் - A Podcast in Tamil on History cover art

The Raja-Praja Show - முடி மன்னரும் குடி மக்களும் - A Podcast in Tamil on History

The Raja-Praja Show - முடி மன்னரும் குடி மக்களும் - A Podcast in Tamil on History

Written by: Raghavan Srinivasan
Listen for free

About this listen

நம்முடைய தொன்று தொட்ட பாரம்பரியத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? Interesting ஆன , அதே நேரத்தில் factual ஆக, அதாவது மெய் நிகழ்வுகளைக் கொண்ட, இன்றைக்கும் பொருத்தமான முறையில் வரலாறை பற்றி அறிந்து கொள்வது ரொம்ப ரொம்ப சாத்தியம். வரலாறை நிச்சயமாக cool subject ஆக மாத்த முடியும். இது தான் இந்த serial ஓட purpose. மேலும் வரலாறு என்பது முடி மன்னர்களின் கதை மட்டுமல்ல, குடி மக்களின் சாதனைகளும் கூட என்பதை இந்த serial நன்றாக எடுத்துக் காட்டும்.Raghavan Srinivasan World
Episodes
  • S1E12- இராஜராஜ சோழர் - ஒரு மதிப்பீடு (Rajaraja Chola - An assessment)
    Feb 14 2023
    Welcome to the Raja-Praja Show. தமிழ்ல இந்த podcast க்கு பெயர் 'முடி மன்னரும், குடி மக்களும் ' இதில முதலாவது serial ‘RajarajaChola - From a People’s Perspective’ - ' அதாவது 'மக்களின் பார்வையில்  இராஜராஜ சோழர்.' இராஜராஜ  சோழரை பற்றிய முதல் 11 episode கள விரும்பி கேட்டிருப்பீங்கன்னு  நினைக்கிறேன். இது கடைசி episode. தயவு செஞ்சு உங்களுடைய நண்பர்களை இந்த podcast க்கு invite பண்ணுங்க. உங்களுடைய feedback ஐ தெரிய படுத்துங்க. Please also rate this show. போன episode ல சோழர் கால இலக்கிய வளர்ச்சிய பாத்தோம். அதிலே பல இலக்கியங்கள் ராஜராஜ சோழர் காலத்தில் எழுத பட்டவை. சோழர் கால கட்டிடக் கலை, சிற்பக் கலை போலவே, இலக்கியங்களும் இன்றும் popular ஆக இருக்கின்றன. பல நூல்கள் காணாமல் போய் விட்டன. சோழர்கள் ஒரு imperial power ஆக வளர்ந்த பிறகு, ஓரளவுக்கு  அந்நிய படையெடுப்பு, உள்நாட்டுக் கலகம் எல்லாம் குறஞ்சது. சைவ, வைஷ்ணவ பக்தி இயக்கங்களின் எழுச்சி தமிழ் மொழிக்கு countless  பாசுரங்களையும், பதிகங்களையும் தந்தது. வசதி இருந்ததால், சோழமன்னர்கள் கலை, இலக்கியங்களை விரும்பி ஆதரித்தார்கள். சோழர் காலத்தில எழுதப்பட்ட இலக்கிய பிரதிகள், அதாவது literary works, ஐ பத்தி விவரங்கள் பல கல்வெட்டுகளில காண முடியும். இந்த serial தொடக்கத்தில் இராஜராஜ சோழனின் ஆட்சியை பற்றி இன்றைக்கும் கூட பல கருத்து வேறுபாடுகள், controversies, இருக்கின்றன என்று சொன்னேன். இது வரைக்கும் ஓரளவுக்கு detail ஆ இந்த மன்னரின் ஆட்சியை அலசி ஆராய்ந்த தோம். நமக்கு தெரிஞ்ச விஷயத்தை வெச்சு இந்த controversies க்கு விடை காண முயற்சி செய்வோம். It's difficult to answer all the critiques. But let's try. 985ம் ஆண்டு முதல்   1014 ம் ஆண்டு வரை இவர் செய்தார். இவர் மகன் முதலாம் இராசேந்திர் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவி யது. அதற்கு  foundation போட்டது இவர் தான். His rule lasted only 30 years. ஆனா இந்த காலம் தான் சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. Why do we say that? ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சி இவருடைய ஆட்சியில் ஏற்பட்டது. It was a period of renaissance for south india. அதே நேரத்தில அது ஒரு மன்னர் ஆட்சி. மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் வெகு சிறிய பங்கே இருந்தது. வரி சுமை மக்களை அமிழ்தியது. இதெல்லாம் நமக்கு தெரிஞ்ச விஷயம் தான். இப்போ அவரை பற்றிய controversies பக்கம் நம்முடைய கவனத்தை திருப்பு வோம். அவருடைய ஆட்சி காலம் ...
    Show More Show Less
    17 mins
  • S1E11-சோழர் இலக்கியங்கள்
    Feb 7 2023

    போன episode ல சோழர் கால சிற்ப கலையை detailed ஆ பாத்தோம்.

    பிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் ஒரு மறுமலர்ச்சி, அதாவது, renaissance, என்று சொல்லலாம்.

    தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்கள் ல, art forms ல, சோழர்கள் சாதனை செய்திதிருக்கிறார்கள்.

    Stone, plaster and metal, அதாவது கல்,சுதை,வெண்கலம். இதை தவிர ஓவிய கலையும் வளர்ந்தது.

    இந்த கலைகள் வளர்வதற்கு காரணம் என்ன? பிற்கால சோழர்களுடைய காலத்தில, குறிப்பா இராஜராஜ சோழரின் ஆட்சியில், There was a tremendous expansion in technology and productive forces. கட்டிட கலைஞர்கள், கல் சிற்பிகள், உலோக சிற்பிகள், ஓவியர்கள், கைவினைஞர்கள், இவர்களுக்கு நிறைய ஆதரவு இருந்தது.

    அதே நேரத்தில மன்னர் ஆட்சியில் இவர்களுக்கு அரசியல் அதிகாரம் ஒன்றும் கிடையாது. கூலி  வேலைக்கரர்களாக  தான் கருத பட்டார்கள். ஆனால் சில stone inscriptions ல இந்த தொழிலாளர் களுடைய பெயர பார்க்கலாம்.

    இந்த  episode ல நாம் அலசப் போவது, சோழர் கால இலக்கியங்கள் - அதாவது Chola literature..

    சோழர்கள் ஒரு imperial power ஆக வளர்ந்த பிறகு, ஓரளவுக்கு  அந்நிய படையெடுப்பு, உள்நாட்டுக் கலகம் எல்லாம் குறஞ்சது. சைவ, வைஷ்ணவ பக்தி இயக்கங்களின் எழுச்சி தமிழ் மொழிக்கு countless  பாசுரங்களையும், பதிகங்களையும் தந்தது.

    வசதி இருந்ததால், சோழமன்னர்கள் கலை, இலக்கியங்களை விரும்பி ஆதரித்தார்கள்.

    சோழர் காலத்தில எழுதப்பட்ட இலக்கிய பிரதிகள், அதாவது literary works ஐ பத்தி விவரங்கள் பல கல்வெட்டுகளில் காண முடியும்.

    இக்காலகட்டத்தில  பக்தி இலக்கியங்கள், தமிழ் இலக்கணங்கள், அரசர் புகழ்பாடும் துதி இலக்கியங்கள் என வகைப் பிரிக்கலாம். These were the popular literary genres of that time.

    Show More Show Less
    18 mins
  • S1E10 - சோழர்கால சிற்பக் கலை
    Jan 31 2023

    போன episode ல சோழர் கால கட்டிட கலையை பத்தி கொஞ்சம் தெரிந்து கொண்டோம்.

    சோழர் காலக் கட்டிடக்கலை என்பது பல்லவர் காலக் கட்டிடக்கலையின் தொடர்ச்சியாக தான் வளர்ந்தது. சோழர்கள் தமிழ் நாட்டில் வலிமை பெற்றிருந்த போது  பல பிரம்மாண்டமான கோவில்களையும்  மாளிகைகளையும் கட்டினார்கள். மன்னர்கள் கட்டினார்கள் என்று கூறுகிறோமே தவிர, உண்மையில கட்டிடத் தொழிலாளர்களும், கட்டிட கலைஞர்களும் , சிற்பிகளும், கொல்லர்களும் தான் அதை நிர்மாணித்தார்கள்.

    ஆனால் இன்னை க்கு சோழர் கால கோயில்களை மட்டும் தான் பார்க்கிரோம். சோழர் கால மாளிகைகளும், கல்வி கூடங்களும், ஆஸ்பத்திரி களும் இன்னைக்கு பார்க்க முடியாது. ஏனென்றால் அவை மரத்தாலும், சுண்ணாம்பு, செங்கல், மண்ணாலும் கட்டப் பட்டவை. கால போக்கில் அவை அழிந்து விட்டன.

    அரண்மனைகள், கோயில்கள், நகரங்களில் மாளிகைகள், கடைத் தெருக்கள் ஆகியவற்றைப் பற்றி இலக்கியங்களில்தான் வருணனைகள் காணப்படுகின்றன. அவை சற்று exaggerated ஆக, imaginative ஆக   எழுதப்பட்டிருக்கின்றன. எந்த அளவு அவை உண்மை என்பதைச் சரிபார்ப்பதற்கு இப்போது ஆதாரம் எதுவும் இல்லை.

    இந்த episode ல சோழர் கால சிற்ப கலையை discuss பண்ணுவோம்.

    பிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் ஒரு மறுமலர்ச்சி, renaissance, என்று சொல்லலாம்.

    தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்கள் ல சோழர்கள் சாதனை செய்திதிருக்கிறார்கள்.

    The sculptures during the Chola period excelled in 3 forms - stone, plaster and metal, அதாவது கல்,சுதை,வெண்கலம். இவை மூன்றும் மூன்றுவகையான  aesthetic trends ஆக வளர்ந்து முழுமை பெற்றிருக்கின்றன. இதை தவிர ஓவிய கலையும் வளர்ந்தது.

    இன்றைக்கும் கூட, தமிழகத்துக் கலைகளைப் பற்றிய விவாதங்களில் அதிகமாக பேசப் படுகிறது சோழர்கலையே.

    So friends, let's look at the art of making sculptures and paintings during the Chola period.

    Show More Show Less
    20 mins
No reviews yet